mUs;kpF kUe;jPRtuh; jpUf;Nfhapy;
jpUthd;kpA+h;> nrd;id-41.
marundeeswarar marundeeswarar marundeeswarar marundeeswarar marundeeswarar marundeeswarar

அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில் - சுற்றுலா தலங்கள்

பிர்லா கோளரங்கம்:

இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கம்ப்யூட்டர் மய கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும். கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகே பெரியார் அறிவியல் மற்றும் தொழிநுட்ப மையத்தில் அமைந்துள்ள இந் கோளரங்கத்தில் ஆங்கிலம் (காலை 10-45 பகல் 01-15; 03-45) தமிழ் ( பகல் 12; 02-30) மொழிகளில் விளக்கம் தரப்படுகிறது. இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 20; சிறியவர்களுக்கு ரூ. 10.

எலியட்ஸ் கடற்கரை:

தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தன் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.

நேப்பியர் பாலம்:

தலைமை செயலகத்திலிருந்து மெரினா கடற்கரை செல்லும் சாலையில் கூவம் நதி மீது அமைந்துள்ள நேப்பியர் பாலம் 1869ல் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் பொறியியல் தொழில் நுட்பத்திற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்கிறது.

டைடல் பார்க்:

வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பத் துறையின் தாயகமாக விளங்குகிறது. இங்கு பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்கள் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உறைவிடமான இங்கு பல்வேறு நவீன வசதிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்களாக பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகளும் இங்கு உள்ளன.

கிண்டி தேசிய பூங்கா:

தேசிய பூங்காவில் பல்வேறு மரங்களும் புள்ளி மான் போன்ற அரிய ரக விலங்குகளும் பறவைகளும் உள்ளன.

அஷ்டலட்சுமி கோயில்:

எலியட்ஸ் கடற்கரையில் அமைந்துள்ள இந்த கோயிலில் மகாலட்சுமியின் 8 வடிவங்கள் விக்ரகங்களாக உள்ளன. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.